AATHMAN AWARENESS CENTRE

Experiences with Narayana Theertha Swamigal - Penned by our Master

ஓம் நமோ நாராயணாய

ஸ்ரீமத் நாராயண தீர்த்தர் ஜீவசமாதி, தஞ்சாவுரிலிருந்து 12 கி. மி தூரத்தில் மேலத்திருப்பூந்துருத்தி கிராமத்தில் அமைந்துள்ளது. நாங்கள் அனைவரும் சுவாமிகளின் அதிஷ்டானத்திற்கு சென்று வருகிறோம். சுவாமிகளின் சமாதி சுமார் 400 வருடங்களுக்கு முற்பட்டது. தஞ்சாவுரை ஆண்ட சோழ மன்னர் சரபோஜி மன்னரின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. சுவாமிகளுக்கு 7 பிரதான சிஷ்யர்கள் இருந்தார்கள். அவர்களின் சமாதிகளும் சுவாமிகளின் சமாதியின் அருகில் உள்ள அக்னிதிர்த்தம் என்று அழைக்கப்படும் குளத்தின் அக்கரையில் உள்ளது. மகானின் சமாதி அருகில் அவர் அமர்ந்து தவம் செய்த மிக பழமையான 400 வருடங்களுக்கு முற்பட்ட பிரம்மாண்டமான மாமரம் அமைந்துள்ளது. நாங்கள் பலமுறை சுவாமிகளின் சமாதியில் இரவில் அமர்ந்து தியானம் செய்திருக்கின்றோம். நம்புவதற்கு கடினமான பல நிகழ்ச்சிகளை பார்த்திருகின்றோம். பல அனுபவங்களையும் அனுபவித்திருகின்றோம்.

உதாரணத்திற்கு ஒரு அனுபவத்தை நாங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். ஒரு ஞாயிற்றுக் கிழமை அன்று பகல் 11 மணி அளவில் நாங்கள் எங்கள் குழுவுடன் அமர்ந்து சுவாமிகளின் சமாதி அருகில் தியானம் செய்து கொண்டிருந்தோம். ஒரு அரைமணிநேரம் கழித்து கண் விழித்து பார்த்தபோது எங்கள் குருவிற்கு உடல் முழுவதும் ஊதா நிறத்தில் மாறிவிட்டது. நாங்கள் பாம்பு தீண்டியதால் அவ்வாறு ஆகிவிட்டது என்று பயந்தோம். ஆனால் குருவிற்கு ஒன்றும் ஆகவில்லை. 15 நிமிடத்தில் சிறிது சிறிதாக பழைய நிலைக்கு மாறிவிட்டது. அதன் முழு தாத்பரியம் பிறகு எங்களுக்கு குரு விளக்கிய பின்பு தான் புரிந்தது. அவர் உரைத்தாவது "சுவாமிகள் கிருஷ்ண பகவான் மீது அளவுகடந்த பக்தியிலும் பிரேமையிலும் ஆழ்ந்து இருந்திருக்கின்றார்". அதனால் தான் எங்கள் குரு தவத்தில் ஆழ்ந்து சுவாமிகளுடன் ஒன்றியபோது சுவாமிகளின் தன் நிலையை குரு மூலமாக எங்களுக்கு வெளிப்படுத்தியிருக்கின்றார் என்பது புரிந்தது. சுவாமிகள் எங்களை தவிர யாரையும் இதுவரை உள்ளே தங்க அனுமதித்ததில்லை. சுவாமிகள் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்த பக்தை ஒருவர் இன்றும் பாம்பு ரூபத்தில் சுவாமியை தரிசித்து வருகிறார் என்பது பல முறை நாங்கள் கண்கூடாக கண்ட அனுபவமாகும்.




பி.கு: நாங்கள் சுவாமிகளின் கோபுரத்திற்கு வர்ணம் பூசி திருப்பணி செய்திருக்கிறோம். சுவாமிகளின் வெளிபிரகாரத்தில் மாமரத்தில் அருகிலுள்ள மேடை வரை நடைபாதை அமைத்திருக்கிறோம். சுவாமிகளின் சிஷ்யர்களின் தூர்ந்து போன சமாதிகளை எழுப்பி இருக்கிறோம். சுவாமிகளின் ஆலய கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டுள்ளோம். சுவாமிகளின் சிஷ்யர்களின் சமாதிகளின் மேல் தற்காலிகமாக கூரை ஒன்று அமைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். இத்திருப்பணிக்கு உதவ மனம் உள்ளவர்கள் மேற்கொண்ட இணைய தலத்தில் தொடர்பு கொள்ளலாம்.











DHTML Menu By Milonic JavaScript