அருட் பிரகாச வள்ளலார் - குருவின் அனுபவங்கள்
என்னை கவர்ந்த மற்றும் என்னை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்து என்னை வழி நடத்தி வருபவர் வள்ளல் பிரான் அவர்களே. எந்த ஒரு இக்கட்டு வரும் போதும் அருட்பெருஞ்ஜோதி என்று சொன்னாலே அடர் துயர் அனைத்தும் பனி போல என்னை விட்டு விலகுவதை தினசரி வாழ்க்கையில் பல முறை அனுபவித்து கொண்டு இருக்கிறேன்.
இப்போது நான் கனவு காணும் போதும் கூட ஆபத்தான நிகழ்ச்சிகள் நடக்கும் போதும் அருட்பெருஞ்ஜோதி என்று சொல்லி அந்த கனவு நிலையிலும் விழிப்பு நிலை அடைந்து என் சுயத்தை உணர்கிறேன்.
அசைவ உணவையும் முழுமையாக விட்டு விட முயற்சி செய்து கொண்டு இருக்கின்றேன். அருட்பிரகாச வள்ளலார் என் உடலிலும் பல மாற்றங்களை செய்து இருப்பதை உணர்கின்றேன்.
என் தந்தையை அக்னியில் தகனம் செய்யும் பொது கூட அருட்பெருஞ்ஜோதியை தான் ஜெபித்து கொண்டு இருந்தேன். ஒரு காண நேரம் கூட என்னை சோகம் சூழாமல், என்னை கண்ணீர் கரையாமல் முழுமையான ஞானியின் விழிப்பு நிலையில் என்னை வைத்திருந்தார். ஒரு கணம் கூட நான் என் தந்தையின் இழப்பைபற்றி இது வரை யோசிக்கவில்லை.
இவர் என் மேல் பொழியும் கருணைக்கு நான் நிச்சயம் பாத்திரமானவன் இல்லை என்பது மட்டும் எனக்கு நன்றாக தெரியும்.
|